×

அதிமுக கோட்டையாக இருந்த திருவள்ளூர் எம்பி தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ்

திருவள்ளூர், மே 25: கடந்த 2009, 2014 நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக வசம் இருந்த திருவள்ளூர் தொகுதியை, காங்கிரஸ் இம்முறை கைப்பற்றி உள்ளது.  காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் கே.ஜெயக்குமார் 3,56,955 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியை கடந்த 2009, 2014 தேர்தலில் அதிமுக, தனது கோட்டையாகவே வைத்திருந்தது. அக்கட்சியின் வேட்பாளர் டாக்டர் பி.வேணுகோபால் எம்.பி.,யானார். இதனால், இந்த தேர்தலில், திருவள்ளூர் தொகுதியை கைப்பற்ற காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் மாநில செயல் தலைவர் டாக்டர்.கே.ஜெயக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.தேர்தல் பிரசாரத்திலும் காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிரம் காட்டினர். இதன் பயனாக, திருவள்ளூர் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை தொடங்கியது.  முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் கே.ஜெயக்குமார் முன்னணியில் இருந்தார். இறுதி சுற்றான 34வது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் 7,67,292 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பி.வேணுகோபால் 4,10,337 வாக்குகளும் பெற்றனர். இறுதியாக 3,56,955 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஜெயக்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Tags : Congress ,AIADMK ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...