×

பெரியார், அண்ணா சிலைகளுக்கு இதயவர்மன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

திருப்போரூர், மே 25: திருப்போரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ இதயவர்மன் நேற்று திருப்போரூர் நகர திமுக அலுவலகம் சென்றார்.அங்கு அவருக்கு திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், நகர செயலாளர் தேவராஜ், துணை செயலாளர்கள் பரசுராமன், ஒய்.மோகன், அவை தலைவர் பலராமன், மாவட்ட பிரதிநிதி சந்திரன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் அன்பழகன், பரணிதரன், சந்திரன், குமரன், சுப்பிரமணி, ரோகிணி ரவி உள்பட திமுக நிர்வாகிகள் வரவேற்றனர். மேலும் மதிமுக ஒன்றிய செயலாளர்கள் லோகு, சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், காங்கிரஸ் நகர தலைவர் தியாகு ஆகியோர் மாலை அணிவித்து வாழ்த்தினர்.தொடர்ந்து எம்எல்ஏ இதயவர்மன் தலைமையில் ஊர்வலமாக சென்று பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள பெரியார், அண்ணா சிலைகள், ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இதயவர்மன், தனக்கு வாக்களித்த தொகுதி வாக்காளர்களுக்கும், களப்பணியாற்றிய கூட்டணி கட்சி தோழர்களுக்கும் நன்றி. மக்கள் வைத்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நடப்பேன் என  கூறினார்.Tags : Periyar ,Anna ,
× RELATED போதிய மழையின்றி பெரியாறில் தண்ணீர்...