×

திமுக கூட்டணி அமோக வெற்றி வி.சி.கட்சியினர் கொண்டாட்டம்

வாலாஜாபாத், மே 25: மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றதையொட்டி, அக்கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையொட்டி வாலாஜாபாத் பேரூராட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இதில் நகர செயலாளர் அசோக்குமார், மாவட்ட துணை செயலாளர் உதயசூரியன், மக்களவை தொகுதி செயலாளர் பாசறை செல்வராஜ், ஒன்றிய செயலாளர் ஜார்ஜ், ஒன்றிய துணை செயலாளர் அகரம்முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : DMK Alliance ,
× RELATED திமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு