×

திருப்போரூர் தொகுதியில் திமுக வாக்கு சதவீதம் அதிகரிப்பு

திருப்போரூர், மே 25: திருப்போரூர் தொகுதியில் தி.மு.க. வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. திருப்போரூர் தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த கோதண்டபாணி, அப்போதைய திமுக வேட்பாளர் விஸ்வநாதனை விட 940 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுகவின் இதயவர்மன் 21,013 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் திமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.2019 இடைத்தேர்தலில் கட்சிகளின் வாக்கு சதவீதம்:  
தி.மு.க.     - 47.48
அ.தி.மு.க.     - 37.82
அ.ம.மு.க.     - 5.48
நாம் தமிழர் கட்சி - 4.5
மக்கள் நீதி மையம் -
வீழ்ச்சி அடைந்த பாமக:திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் பாமக வலுவான கட்சியாக கருதப்பட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் பாமக இருக்கும் கூட்டணியே வெற்று பெறும் என கடந்த 3 தேர்தல்களில் உடைக்கப்பட்டுள்ளது.கடந்த 2011 தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் பாமக இருந்தது. பாமக வேட்பாளராக திருக்கச்சூர் ஆறுமுகம் அறிவிக்கப்பட்டார். ஆனால் அதிமுகவை சேர்ந்த தண்டரை மனோகரன் தான் போட்டியிட்டார். 2016 தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டு அதன் வேட்பாளர் பி.வி.கே.வாசு 25 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றார்.இந்த இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது. தங்கள் கட்சிக்கு மட்டும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வாக்கு வங்கி இருப்பதாக அக்கட்சியினர் கூறி வந்தனர். ஆனால், பாமக கூட்டணியில் இருந்தும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. கடந்த 3 தேர்தல்களிலும் நடந்த வாக்குப்பதிவுகளின் மூலம் பாமகவின் உண்மை பலம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவே தெரியவந்துள்ளது.


Tags : Tiruppuroor ,constituency ,DMK ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...