திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திருச்செங்கோடு, மே 25: நாமக்கல்  நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில், கொமதேக சின்ராஜ் போட்டியிட்டு 2.65 லட்சம் அதிக வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில், நகர செயலாளர் கார்த்தி தலைமையில், கொமதேக நகர தலைவர் நாகராஜ், செயலாளர் சேன்யோ   குமார் மற்றும் கட்சியினர் கூடி பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகர திமுக பொறுப்பாளர்கள் ரமேஷ், ஆறுமுகம்,  பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேந்தமங்கலம்: நாமக்கல் நாடளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கொமதேக சின்ராஜ் வெற்றி பெற்றார். இதையொட்டி, சேந்தமங்கலம் நகர திமுக செயலாளர் தனபால் தலைமையில் கூட்டணி காட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும், சேந்தமங்கலம் பேரூராட்சி சின்ன மற்றும் பெரிய தேர்நிலை, வண்டிப்பேட்டை, கடைவீதி, அரசமர பஸ்நிறுத்தம் ஆகிய பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் இளைஞரணி துணை அமைப்பாளர்  கதிர்வேல், திமுக நிர்வாகிகள் செல்லப்பன், கிருஷ்ணகுமார், காமேஸ்வரன், கிருஷ்ணன், கவின், சாமிதுரை, பெரியசாமி, கலா ரவி, பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED 96வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் கலைஞர் படத்துக்கு திமுகவினர் மரியாதை