குன்னூரில் தி.மு.க. வினர் உற்சாக கொண்டாட்டம்


குன்னூர் மே 25:  நீலகிரி மக்களவை தொகுதியில் ஆ. ராசா வெற்றி பெற்றதை குன்னூரில் தி.மு.க  தொண்டர்கள் ஊர்வலம் நடத்தி உற்சாகமாக கொண்டாடினர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.  நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட ஆ. ராசா தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக  வேட்பாளர் தியாகராஜனைவிட சுமார் 2 லட்சத்து 42 ஆயிரத்து 823 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

ஆ. ராசா வெற்றி பெற்றதை  கொண்டாடும் வகையில், குன்னூரில் தி.மு.க  தொண்டர்கள்,  நகர செயலாளர் ராமசாமி தலைமையில்  ஊர்வலம் சென்றனர். குன்னூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினர். மேலும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணி உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அணி, பொது குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : DMK ,celebration ,Coonoor Celebration ,
× RELATED குளிர்கால கொண்டாட்டம்!