×

மாவட்டத்தில் பொது கழிப்பறைகளை உள்ளாட்சி அமைப்புகளே பராமரிக்க மக்கள் வலியுறுத்தல்

ஊட்டி, மே 25:நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக பயன்படுத்தி கொள்ளும் வகையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பொதுகழிப்பறைகளை கட்டப்பட்டன. அவை தற்போது டெண்டர் விடப்பட்டு தனியார் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. டெண்டர் எடுப்பவர்கள் லாப நோக்கில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவு கட்டணத்தை வசூலிக்கின்றனர். பொது கழிப்பறைகளை கட்டணங்கள் அதிகளவு வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் சாலை பகுதிகள், ஒதுக்குப்புறமான பகுதிகளை நாடி செல்கின்றனர். இதனால் அப்பகுதி மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

நகராட்சி, உள்ளாட்சி மன்றங்களில் கழிப்பறைகளை நடத்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்திற்கு ஒப்புதல் கொடுத்தே டெண்டர் எடுக்கின்றனர். டெண்டர் எடுத்தவுடன் பெயரளவிற்கு மட்டுமே போர்டுகள் வைத்து விட்டு, அவர்களாக நினைத்த கட்டணத்தை வசூலிக்கின்றனர். ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கழிப்பிடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் முறையாக பராமரிப்படுவதில்லை. எனவே டெண்டர் விடுவதை நிறுத்திவிட்டு முறையான கண்காணிப்புடன் கழிப்பறைகளை உள்ளாட்சி அமைப்புகளே நேரடியாக பராமரிக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : district ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...