ராஜாமில் ரோட்டில் பாதாள சாக்கடை பணி மந்தம்

பொள்ளாச்சி, மே 25:  பொள்ளாச்சியில் வாகன போக்குவரத்து மிகுந்த ராஜாமில்ரோட்டில் பாதாள சாக்கடை பணி மந்தமாக நடப்பதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணியானது, தற்போதும் ஆங்காங்கே தொடர்ந்துள்ளது.

இதில், வாகன போக்குவரத்து, வணிக நிறுவனங்கள் நிறைந்த ராஜாமில் ரோட்டில், கடந்த சில வாரத்திற்கு முன்பு துவங்கப்பட்டு, அன்று முதல் அப்பகுதியில் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், பாதாள சாக்கடைக்கு என குழிதோண்டப்பட்டு பல நாட்கள் கடந்தும், அதில் குழாய் பதித்து முறையாக மூடாமல் கிடப்பில் போட்டுள்ளனர். பாதாள சாக்கடை பணி மந்தமாக இருப்பதால், அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் மாற்று பாதையில் இயக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.   எனவே, ராஜாமில்ரோட்டில் நடக்கும் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடித்து, வாகன போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : palace ,
× RELATED கூரையை பிரித்து இறங்கி திருடி விட்டு...