கோவையில் எஸ்.ஆர்.எம்.யு. ஆர்ப்பாட்டம்

கோவை மே 25: தொழில்நுட்ப பிரிவில் காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் எஸ்.ஆர்.எம்.யு. சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை ரயில்வே பனிமனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யு சங்கத்தின் கோவை தலைமை கிளை செயலாளர் ஜோன் செபாஸ்டியன் தலைமை தாங்கினார்.

இதில் கேரேஜ் பிரிவில் சீனியர் டெக்னீசியன் பதவி உயர்விற்கான பணியிடங்கள் 4 மாதம் நிரப்பப்படாமல் இருப்பதை கண்டித்தும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை சேலம் கோட்டத்தில் மட்டும் வழங்காததை கண்டித்தும், பணிமனைகளில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யு. சங்க கோவை மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

× RELATED தமிழ்நாட்டில் ரயில்வே பணியில்...