×

மது விற்ற 7 பேர் கைது

கோவை, மே.25: கோவையில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அழகு(34), வரதன்(31), செந்தில்குமார்(44), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தொண்டிராஜ்(52), ரகு(35), கோவை பீளமேட்டை சேர்ந்த பாலமூர்த்தி(64), டாடாபாத்தை சேர்ந்த நாகராஜ்(32)  ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 71 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்