கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

கோவை, மே.25: கோவை பீளமேடு போலீசார் சவுரிபாளையம் கல்லறை தோட்டம் பகுதியில் நேற்றுமுன்தினம் ரோந்து சென்றனர்.அப்போது, அங்கு வாலிபர் ஒருவர் கஞ்சா விற்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் சிங்காநல்லூர் போயர்வீதியை சேர்ந்த அர்ஜூன்(20), என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : kanja ,Coimbatore ,
× RELATED அண்ணனை மண்வெட்டியால் தாக்கிய தம்பி கைது