×

மாவட்டம் நத்தத்தில் முத்தரையர் பிறந்தநாள் விழா

நத்தம், மே 25:  நத்தத்தில் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி முத்தரையர் சங்கத்தினர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு பஸ்நிலையம், மூன்று லாந்தர், அவுட்டர் வழியாக நத்தம் மாரியம்மன் கோயினை சென்றடைந்தனர். அங்கு பெரும்பிடுகு முத்தரையர் பெயருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து சங்க வளாகத்தில் உள்ள பெரும்பிடுகு முத்தரையரின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சங்க வட்டார தலைவர் வீரனம்பம்பலம், துணைத்தலைவர் ஆண்டிச்சாமி, மாவட்ட செயலாளர் முரசு வீரையா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : birthday party ,district ,Natham ,
× RELATED காமராஜர் பிறந்தநாள் விழா