×

‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் தாண்டிக்குடி மலைப்பகுதியில் ‘கண்டிஷன்’ இல்லாத பஸ்கள் இயக்கம் பாதி வழியில் நிற்பதால் பரிதவிப்பு

பட்டிவீரன்பட்டி, மே 25: தாண்டிக்குடி மலைப்பகுதியில் மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு பஸ்கள் அடிக்கடி பாதி வழியிலே நின்று விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். தாண்டிக்குடி, பெரும்பாறை போன்ற மலைப்பகுதி ஊர்களுக்கு திண்டுக்கல் மற்றும்  வத்தலக்குண்டு அரசு பணிமனைகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அரசு பஸ்களையே நம்பியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக திண்டுக்கல், வத்தலக்குண்டு வந்து செல்ல அரசு பஸ்களே பெரும் உதவியாக உள்ளது.

ஆனால் இப்பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் எதுவுமே சரியில்லை. அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளது. ஜன்னல் கண்ணாடி உடைந்தும், மழைக்கு ஒழுகும் பஸ்களாக இருப்பதால் பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் பல பஸ்கள் பாதிவழியில் நின்று விடுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பெரும்பாறை, தாண்டிக்குடியில் மஞ்சள்பரப்பு, தனியன்குடிசை, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி போன்ற 30க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் இயக்கப்படும் அரசு பஸ்கள் மிகவும் மோசமான ‘கண்டிஷனில்’ உள்ளது. இதனால் அடிக்கடி பாதி வழியில் நின்று விடுகிறது.

2 நாட்களுக்கு முன்பு கூட ஆடலூர் நோக்கி சென்ற அரசு பஸ் மலைப்பகுதியில் ஆலமரம் என்ற இடத்தில் இன்ஜின் கோளாறால் பாதி வழியில் நின்றது. பின்னர் பல மணிநேரம் கழித்து அந்த வழியாக வந்த மற்றொஸ பஸ்சில் ஏறி சென்றனர். இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதியடைந்தனர். எனவே அரசு போக்குவரத்து கழகம் பெரும்பாறை, தாண்டிக்குடி மலைப்பகுதிகளுக்கு தரமான பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Jyotitha Ratna ,KP Vidyadharan ,Thandikudy ,Kandy ,hills area ,
× RELATED ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்...