×

அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

கமுதி, மே 25: கமுதி அருகே வலையபூக்குளம் சத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பெரிய முத்தம்மன் கோவில், சந்தன மாரியம்மன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில், பெரியாண்டவர் கோவில் வைகாசி பொங்கல் விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 21ம் தேதி பொங்கல் விழாவில் ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். 22ம் தேதி அக்னிச்சட்டி திருவிழாவில் பலர் வேல் குத்தியும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக் கடனை செலுத்தினர். 23ம் தேதி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நேற்று பெரியாண்டவர் கோவில் பொங்கல் விழா நடைபெற்றது. இன்று முளைப்பாரி திருவிழா நடைபெறுகிறது. பொங்கல் விழாவை முன்னிட்டு தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாடார் உறவின்முறை அம்பலகாரர் கோபால், காரியகாரர் நாகராஜ், முறைகாரர்கள் சித்திரவேல், வசந்தன், முனியசாமி, சந்தனம் மற்றும் விழா கமிட்டியினர், அனைத்துகிளை உறவின்முறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கு சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, சிவகாசி, மணமேல்குடி மற்றும் பல ஊர்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvilaku Pooja ,temple ,Amman ,
× RELATED ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன்...