×

கடும் வெயிலால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்

பண்ருட்டி, மே 25: பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைக்கிறது. பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. இதனால் சிறுவர்கள் வெளியில் விளையாடக்கூட வரமுடியாமல் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். ஒருசிலர் நிலத்தில் உள்ள மோட்டார் கொட்டகையில் சென்று பம்பு செட்டில் குளித்து வருகின்றனர். பள்ளி விடுமுறையில் இருந்தாலும், வெளியில் சென்று விளையாடி பொழுதை கழிக்க முடியாமல் சிறுவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் வெயில் காலத்தை சமாளிக்க இளநீர், நுங்கு, தர்பூசணி ஆகியவற்றை அதிகளவு வாங்கி சாப்பிடுகின்றனர். இந்த வெயில் நேற்று கூடுதலாக இருந்தபோது கடை வீதிகள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடியது. வர்த்தகம் கடுமையாக பாதித்தது. இது குறித்து பண்ருட்டி மருத்துவர்கள் கூறுகையில், இந்த கோடை வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வதைத்து நோய்களை ஏற்படுத்தும். கதர் ஆடைகளை அதிகளவு பயன்படுத்த வேண்டும். பழச்சாறுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இயற்கை தானியங்களை உணவாக எடுத்துக்கொள்ளுதல் உடலுக்கு நல்லது. காலை 12 முதல் 3 மணி வரை வெயில் அதிகளவு உள்ளதால் பொதுமக்கள் இதுபோன்ற நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறினர்.


Tags : home ,
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...