×

சேதப்படுத்திய அதே இடத்தில் அம்பேத்கருக்கு வெண்கல சிலை

செய்யூர்: செய்யூர் அடுத்த இரும்பேடு கிராமத்தில் இருந்த அம்பேத்கர் சிலை, கடந்த 2ம் தேதி இரவு மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதையறிந்த கிராம மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சேதமடைந்த சிலை அங்கிருந்து அகற்றி, அதே இடத்தில் புதிய வெண்கல சிலை நேற்று  நிறுவி, திறப்பு விழா நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொது செயலாளர் எழில் கரோலின், மகளிர் அணி தலைவர் மகிழினி, மண்டல பொறுப்பாளர் விடுதலைச் செழியன், மாவட்ட துணை செயலாளர் ஈழவேந்தன், தொகுதி பொறுப்பாளர் பொன்னிவளவன் உள்பட பலர் கலந்து  கொண்டனர்….

The post சேதப்படுத்திய அதே இடத்தில் அம்பேத்கருக்கு வெண்கல சிலை appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Seyyur ,Irumpedu ,Dinakaran ,
× RELATED ஆற்காடு செல்லும் சாலை இரும்பேடு...