×

வடக்குஉடைப்பிறப்பில் உச்சினிமாகாளியம்மன் கோயில் கொடை விழா

சாத்தான்குளம், மே 25: சாத்தான்குளம்  அருகே உள்ள வடக்கு உடைப்பிறப்பு உச்சினிமாகாளியம்மன்,  முத்தாரம்மன், மாரியம்மன் கோயில் கொடை விழா கடந்த 19ம் தேதி  தொடங்கி 23ம் தேதி வரை 5 நாட்கள் நடந்தது. முதல் நாளன்று மாலை  6 மணிக்கு குருபூஜை, 2ம் நாளான 20ம் தேதி இரவு 7 மணிக்கு முக்கடல்  தீர்த்தம் கொண்டு வருதல், பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை  நடந்தது. 21ம் தேதி காலை 10 மணிக்கு சிவசக்தி கோயிலில்  இருந்து அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல், மதியம் 2 மணிக்கு  அம்மன் வீதிஉலா வருதல், மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல் நடந்தது.  இரவு 7 மணிக்கு பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது. இரவு  10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி  எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வருதல், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை  நடந்தது.

22ம் தேதி மதியம் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு  தீபாராதனை, அம்மன் வீதிஉலா வருதல், மஞ்சள் பெட்டி  எடுத்து அம்மனை கோயிலுக்கு எடுத்து வருதல், மாலை 5 மணிக்கு மஞ்சள்  நீராடுதல், இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு  அர்த்த ஜாம பூஜை நடந்தது. நிறைவு நாளான 23ம் தேதி காலை 7 மணிக்கு சுவாமி  உணவு எடுத்தல், இரவு 7 மணிக்கு சிவசந்திரனின்  ஆன்மீக வழிபாடு பக்தி நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில்  விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags : Kizhi Festival ,temple ,Peakinakaliyamman ,
× RELATED வார விடுமுறை முடிந்து சென்னை...