×

போலீசாருக்கு உடல் மனநலம் பயிற்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சரகத்துக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான மனநலம் சார்ந்த பயிற்சி வகுப்பு சென்னை நைட்டிங்கேல் லயன்ஸ் கிளப் சார்பில் காஞ்சிபுரத்தில் நடந்தது. பயிற்சி வகுப்பை டிஐஜி சத்திய பிரியா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய காஞ்சிபுரம் சரக காவல்துறை டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் இதில் கலந்து கொண்டனர். பணியின் போது ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை மனநலம் சார்ந்து எப்படி கையாள்வது குறித்தும், உடல் நலம் சார்ந்த பயிற்சிகள் இந்த பயிற்சி பட்டறையில் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர், செய்தியாளர்களிடம் கூறுகையில், காஞ்சிபுரம் சரக காவல்துறை அதிகாரிகளுக்கு துறை தலைமையிடத்து இயக்குனர் உத்தரவின் பேரில் மனநலம், உடல்நலம் சார்ந்த பயிற்சிகள் சிறப்பாக வழங்கப்பட்டது என்றார். நிகழ்ச்சியில், சென்னை நைட்டிங்கேல் லயன்ஸ் கிளப் தலைவர் ஜோஸ்வா ஜெரார்ட், அந்தோணி செபஸ்டின், டாக்டர் கண்ணன், ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post போலீசாருக்கு உடல் மனநலம் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Chennai Nightingale Lions Club ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...