உடுமலை நகராட்சியில் பசுமை உரக்குடிலில் உரம் தயாரிப்பு துவக்கம்

உடுமலை,மே24:உடுமலை நகராட்சியில் தினசரி சேகரமாகும் திடக்கழிவுகள், பொள்ளாச்சி சாலையில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் கடந்த 12 ஆண்டுகளாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. திடக்கழிவு பணிகளை மேம்படுத்தும் வகையில், நகராட்சி உரக்கிடங்கில் உள்ள பழைய கழிவுகள் பயோ மைனிங் முறையில் அப்புறப்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகளில், மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க நகராட்சி பகுதியில் 3 பசுமை உரக்குடில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதில் ராஜேந்திரா சாலையில் உள்ள பசுமை உரக்குடில் முழுமையாக பணி முடிந்ததால், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இதை நகராட்சி ஆணையர் ராஜாராம், கடந்த 22ம் தேதி துவக்கி வைத்தார்.

‘விரைவில் அனைத்து உரக்குடில்களும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த உரக்குடில் மூலமாக மக்கும் குப்பை, இயற்கை உரங்களாக தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்’ என்றார். நிகழ்ச்சியில் பொறியாளர் தங்கராஜ், உதவி பொறியாளர் ஜான்பிரபு, நகர்நல அலுவலர் (பொ) சிவக்குமார், துப்புரவு ஆய்வாளர்கள் ஆர்.செல்வம், பி.செல்வம், செல்வகுமார், ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories:

>