செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது

ஆலந்தூர்: திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 29வது தெருவில் வசித்து வருகிறார். இவரது மனைவி சம்பூர்ணம் (60). இவர் கடந்த 10ம் தேதி தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 ஆசாமிகள் அவரது கழுத்தில் கிடந்த 9 சவரன் செயினை பறிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட அவர், செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்த ஆசாமிகள் பைக்கில் தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில், ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர். அதில், செயின் பறிப்பில் ஈடுபட்டது 17 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுபடி கெல்லீஸ் சிறார் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Tags : boys ,raid ,Chain ,
× RELATED காரைக்குடி பகுதியில் விதியை மீறி...