×

கொடைக்கானலில் சுற்றுலா வாகன நிறுத்துமிட சுற்றுச்சுவரில் விரிசல்

கொடைக்கானல், மே 23: கொடைக்கானலில் சுற்றுலா வாகன நிறுத்துமிட சுற்றுச்சுவர் விரிசல் விழுந்து இடியும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் நடக்கும் முன் சீரமைக்க வேண்டும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானலில் கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்குநாள் அதிகம் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

இதனால் சுற்றுலா பஸ்கள், வேன்கள், கார்கள் அதிகமான எண்ணிக்கையில் வருகின்றன. இவை கொடைக்கானல் கேஆர்ஆர் கலையரங்கம் பகுதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்படுகின்றன. இங்கு 3 பகுதியில் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் சுற்றுலா வாகனஓட்டிகள் அச்சத்துடன் நிறுத்தி வருகின்றனர்.

எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பு நகராட்சி நிர்வாகம் விரைந்து வாகன நிறுத்துமிட சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இடநெருக்கடியை கருதி இப்பகுதியில் பயன்பாட்டில் இல்லாத பகுதிகளை தூய்மைப்படுத்தி சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்