சூப்பர் இன்போசிங்கிற்காக சென்னைக்கு செல்கிறது திண்டுக்கல் எலும்புக்கூடு

திண்டுக்கல், மே 23: திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் கிடைத்த எலும்புக்கூடுவை காணாமல் போனவர்களின் படங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்காக சூப்பர்இன்போசிங் செய்ய சென்னைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் கழிவுநீர் கால்வாயில் நேற்று முன்தினம் ஒரு எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இறந்தவர், ஆணா, பெணா என சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதனை கைப்பற்றிய நகர் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மண்டை ஓடு, தொடை எலும்புவை சென்னையில் உள்ள தடய அறிவியல் நிறுவனத்திற்கு சூப்பர் இன்போசிங்கிற்காக அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஆய்விற்கு பின்புதான் இறந்தது ஆணா, பெண்ணா என தெரியும். மேலும் தமிழகம் முழுவதும் காணாமல் போனவர்கள் படங்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ‘குள்ளனம்பட்டியில் இறந்து 3 மாதமான எலும்பு கூடு கிடைத்துள்ளது. இவர் தற்கொலை செய்து கொண்டவரா, யாரும் கொலை செய்து வீசினார்களா என்ற கோணத்தில் விசாரணை ஒருபுறம் துவக்கப்பட்டுள்ளது. அதேநேரத்ததில் தமிழகம் முழுவதும் காணாமல் போனவர்கள் பட்டியலுடன் ஒப்பிட்டு வருகிறோம். சூப்பர் இன்போசிங்கிற்காக எலும்பு கூடு தயார் நிலையில் உள்ளது. விரைவில் கண்டுபிடித்து விடுவோம். தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories:

>