×

கரூர் பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி

கரூர், மே 24:  கரூர் எம்பி தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும், அதிமுக சார்பில் பாராளுமன்ற துணைசபாநாயகர் தம்பிதுரையும் போட்டியிட்டனர். வாக்குவித்தியாசம் முதல்சுற்றில் இருந்தே ஜோதிமணிக்கு அதிகமாகஇருந்தது. வாக்குவிபரம்: முதல் சுற்று:காங்கிரஸ் 35110,அதிமுக 15447. 2வதுசுற்று காங்கிரஸ் 35725,அதிமுக 13809.3வது சுற்றுகாங்கிரஸ்  34298,அதிமுக 13352. 4வது சுற்று: காங்கிரஸ் 38019,அதிமுக15025.5வது சுற்று:காங்கிரஸ்  35160,  அதிமுக13847. 6வது சுற்று:காங்கிரஸ் 35826, அதிமுக 14489.7வது சுற்று:காங்கிரஸ்  34362,அதிமுக 15274.8வது சுற்று:காங்கிரஸ் 36890,அதிமுக 13227. 9வது சுற்று:காங்கிரஸ் 35288,அதிமுக13069.10வது சுற்று:காங்கிரஸ் 35433,அதிமுக.14806. 11வது சுற்று:
காங்கிரஸ் 35523,அதிமுக 14296.12வது சுற்று:காங்கிரஸ்  31659, அதிமுக14102.13வது சுற்று:காங்கிரஸ் 35556,அதிமுக 13940.14வது சுற்று காங்கிரஸ்- 31708அதிமுக 13120. 15வது சுற்று:காங்கிரஸ்-36767,அதிமுக -12357. 16வது சுற்று
காங்கிரஸ்37511,அதிமுக  11265.17வது சுற்று காங்கிரஸ் 33571,அதிமுக 1352218வது சுற்று:காங்கிரஸ் 34846,அதிமுக 13238.19வது சுற்று:காங்கிரஸ் 34846,அதிமுக 13228. 19வது சுற்று: காங்கிரஸ் 15002, அதிமுக7458.

24வது சுற்று முடிவில் வாக்குகள் விவரம்மொத்த வாக்குகள் 13,65802 பதிவானவை           10,97024 ஜோதிமணி(காங்கிரஸ்) 6,95,697,  தம்பிதுரை(அதிமுக) 2,75,151, தங்கவேலு (அமமுக)31,139, ஹரிகரன்(மநீம)15,967, கருப்பையா (நாம் தமிழர் கட்சி)  38,543,  நோட்டா 9603,  வாக்குவித்தியாசம் 4,20,546.தம்பிதுரை வெளியேறினார்கரூர் எம்பி தொகுதியில் துணைசபாநாயகராக இருந்த தம்பித்துரை 6வது முறையாக போட்டியிட்டார். தொடர்ந்து மூன்றாவது முறை வெற்றிபெற்ற ஹாட்ரிக் அடிக்கலாம் என வாக்குஎண்ணிக்கை மையத்திற்கு வந்தார். முதல்ரவுண்டில் அவரை விட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 19663 ஓட்டு அதிகம்பெற்றார். 2வது ரவுண்டில் 41571 வாக்குகள் அதிகம்பெற்றார். வாக்குவித்தியாசம் மிக அதிகமாகஇருந்ததால் தம்பிதுரை வாக்குஎண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறினார். சோகத்துடன் காணப்பட்ட அவர் காரில் புறப்பட்டு சென்றார்.

Tags : Karur ,Election ,candidate ,Congress ,Jitimani ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் பணியாளர்கள், காவலர்கள் தபால் வாக்கு செலுத்தினர்