4வது முறையாக செந்தில்பாலாஜி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்

கரூர், மே 24: 4வது முறையாக செந்தில்பாலாஜி சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்செந்தில்பாலாஜி வெற்றிபெற்றார், இவர் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை 37,814 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்,  அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் நோட்டாவை சேர்த்து 64 வேட்பாளர்களாக 63பேர் போட்டியிட்டனர், இதில் திமுக, அதிமுக வேட்பாளர்களைத்தவிர மற்ற 61வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.செந்தில்பாலாஜி ஏற்கனவே 2006, 2011 ம் ஆண்டுகளில் இருமுறை கரூர் எம்எல்வாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் கடந்த 2016ம் ஆண்டு அரவக்குறிச்சியில் வெற்றிபெற்றார்., தற்போது வெற்றிபெற்றதன் மூலம் 4வதுமுறையாக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி சான்றிதழை வழங்கினார். திமுக நிர்வாகிகள் கே.சி.பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, கரூர் தொகுதி எம்பியாக வெற்றிபெற்ற ஜோதிமணி, நன்னியூர் ராஜேந்திரன், உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Senthilpalaji ,assembly election ,
× RELATED ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி...