கொமதேக வேட்பாளர் வெற்றி சேந்தமங்கலத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சேந்தமங்கலம், மே 24:  நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் சின்ராஜ், அதிமுக வேட்பாளரை விட 2.65 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இதையடுத்து சேந்தமங்கலத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் சின்ராஜ், அதிமுக வேட்பாளர் காளியப்பனை விட 2.65 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, கொல்லிமலை சோளக்காடு ஆகிய பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கூடி பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர் அசோக்குமார், நகர செயலாளர் தனபாலன், பேரூர் செயலாளர் நடேசன், கொல்லிமலை ஒன்றிய செயலாளர் பழனிமுருகன் உள்ளிட்ட பலா; கலந்து கொண்டனர். புதன்சந்தையில் ஒன்றிய பொறுப்பாளர் துரை ராமசாமி, புதுச்சத்திரத்தில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கௌதம் ஆகியோர் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Tags : celebration ,candidate ,Kemadega ,
× RELATED மேலகரத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா