×

கோவை மாவட்டத்தில் ஒரு ஆண்டில் 37,979 வாகனங்கள் விற்பனை

கோவை, மே 23: கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 37,979 வாகனங்கள் பதிவாகி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் இரு சக்கர வாகனங்கள், 30 சதவீதம் ஆட்டோ, சரக்கு ஆட்டோ, வேன், லாரி, பஸ் போன்ற வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. கோவை வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலகம் மூலமாக 9,691 வாகனங்களும், மேற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 9,276 வாகனங்களும், வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 11,525 வாகனங்களும், தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 7,487 வாகனங்களும் பதிவாகி விற்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட அளவில் இந்த வாகனங்கள் விற்பனை மூலமாக சுமார் 124 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

வாகனங்களின் விற்பனை, பதிவு விவரங்கள் ஆகியவை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வாகன், சாரதி என இரு வெப்சைட்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.வாகனங்களின் இயக்கம், பதிவு, திருட்டு, விபத்து ஏற்படுத்திய வாகனங்கள், வழக்கில் சிக்கிய வாகனங்களை அடையாளம் காணும் வகையிலான திட்டங்களை அமலாக்கவேண்டும் என நுகர்வோர் மன்றங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

Tags : Coimbatore ,district ,
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு