×

இவ்வாறு மணிராஜ் கூறினர். கோவை ஜிசிடி கல்லூரியில் போலீஸ் ஆலோசனை கூட்டம்


கோவை, மே.23:கோவை ஜிசிடி கல்லூரியில் பாதுகாப்பில் ஈடுபடும் போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் போலீஸ் கமிஷனர் தலைமையில் நேற்று நடந்தது. கோவை மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகளும், சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் கோவை தடாகம் ரோட்டில் உள்ள (ஜிசிடி) அரசு தொழில் நுட்ப கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறைகளை சுற்றி 160 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பதிவாகும் காட்சிகள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளில் வைக்கப்பட்டுள்ள டி.வி.க்களில் 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கும் துணைராணுவத்தினர் இன்று பாதுகாப்புக்காக நிறுத்தப்பட இருக்கிறார்கள். இந்த நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜிசிடி), கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கும் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.கூட்டத்தில்,  அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கும் போலீசார் தீவிரமாக வாக்கு எண்ணிக்கை மையத்தை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Maniraj ,Police Consulting Meeting ,Coimbatore GCC College ,
× RELATED சிவகாசியில் கடந்த 15-ம் தேதி நிகழ்ந்த...