×

மேலூரில் பரபரப்பு சோழவந்தான் அருகே பக்தர்கள் கத்தி போடும் விழா

சோழவந்தான், மே 23: சோழவந்தான் அருகே, காடுபட்டியில் சௌடாம்பிகை அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழா, கடந்த 17ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் காளியம்மன், மாரியம்மன் கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். நேற்று மன்னாடி மங்கலம் வைகையாற்றிலிருந்து ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கரகம் எடுத்து காடுபட்டி வரை ஊர்வலமாக வந்தனர். அப்போது பக்தர்கள் உடலில் கத்தி போட்டு, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதனைக் காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இன்று சேத்தாண்டி வேஷம், பொங்கல், அக்னிசட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தேவாங்கர் உறவின்முறை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Devotees ,festivity ,Cholavanthan ,Melur ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...