×

தீயணைப்புத்துறை சார்பில் சமயபுரம் கோயிலில் தீத்தடுப்பு செயல்விளக்கம்

மண்ணச்சநல்லூர், மே 23:   சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். தமிழகத்தில் உள்ள சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயிலில் 3 மாதங்களுக்கு ஒரு முறை தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தீவிபத்து ஏற்படுவதை தடுப்பது குறித்தும் தீயணைப்பு முறைகள் குறித்தும் தீயணைப்பு வீரர்களால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சமயபுரம் மாரியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப்எடிசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள்  தீத்தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சியில் சமயபுரம் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். கோயில் அலுவலர்கள், காவல் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், அன்னதான பணியாளர்கள், கோயில் குருக்கள், மின் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.


Tags : demonstration ,temple temple ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்