×

தள்ளுவண்டிகளில் இழுத்து சென்றதால் 63 நாயன்மார்களுக்கு அவமதிப்பு?

மதுரை, மே 23: மதுரை வீதிகளில் 63 நாயன்மார்களின் சிலைகளை தள்ளுவண்டிகளில் இழுத்து சென்றதால், அவர்கள் அவமதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் சமணம் மேலோங்கிய காலத்தில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட  63 நாயன்மார்கள் சைவத்தை வளர்த்தனர். இவர்களின் சிலைகள் சிவாலயங்களில் வைத்து பூஜை செய்யப்படுகின்றன. மதுரை அருகே, திருவாதவூரில் மாணிக்கவாசகர் கோயில் உள்ளது. திருஞானசம்பந்தர் மதுரை ஆதீனத்தை தோற்றுவித்தார், அவருக்கு ஆதீன மடத்தில் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் திருஞானசம்பந்தர் குருபூஜையை முன்னிட்டு, வைகாசி மூல திருநட்சத்திரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலுள்ள 63 நாயன்மார்களின் சிலைகளும், சிறிய அளவிலான தனித்தனி சப்பரங்களில் அலங்கரிக்கப்பட்டு, கோயிலை சுற்றிய ஆவணி மூலவீதிகளில் உலா வருவது வழக்கம்.

இதனடிப்படையில், நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 63 நாயன்மார் வீதிஉலா நடைபெற்றது. இதைக்கண்டு பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர். 63 நாயன்மார்களின் விக்ரகங்களின் மரச்சப்பரங்களும் தனித்தனியாக கொண்டு செல்லாமல், நாயன்மார்களின் விக்கிரகங்களை தள்ளுவண்டிகளில் வைத்து, அதனை கயிற்றில் கட்டி, வண்டியை இழுத்து சென்றனர்.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. அதில், ‘63 நாயன்மார் வீதியுலாவில் அவர்களின் சிலைகளை மரச்சாமான்களை வண்டியில் அள்ளி போட்டு இழுப்பது போல் சென்றது அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தையே காட்டுகிறது. தனித்தனியாக சப்பரங்களில் வைத்து உலா வராதது ஏன், சிக்கனமா? என்று விமர்சித்துள்ளனர்.  இது குறித்து மதுரை ஆதீனம் கூறும்போது, ‘வழக்கமாக இப்படி வண்டியில் வைத்துதான் இழுத்து வருகிறார்கள். இது நாயன்மார்களுக்கு அவமதிப்பாக தோன்றவில்லை’ என்றார்.

வலைதளங்களில் வைரலாகும் புகார்
தொகுதி வாரியாக சுற்றுகள் எண்ணிக்கை

 மதுரை மக்களவைத் தொகுதியில் உள்ள மேலூர் சட்டமன்ற தொகுதியில் 19 சுற்றும், மதுரை கிழக்கு தொகுதியில் 22 சுற்றும், மதுரை வடக்கு தொகுதியில் 16 சுற்றும், மதுரை தெற்கு தொகுதியில் 15 சுற்றுக்களாகவும் எண்ணப்படுகிறது. மதுரை மத்திய தொகுதியில் 17 சுற்றும், மதுரை மேற்கு தொகுதியில் 19 சுற்றுகளாக வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும்.  இடைத்தேர்தல் நடந்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

Tags : Nation ,
× RELATED 18,626 பக்க அறிக்கை குடியரசுத் தலைவரிடம்...