டூவீலர்கள் மோதல் வாலிபர் பலி

திருப்புத்தூர், மே 23: திருப்புத்தூர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். திருப்புத்தூர் அருகே ஆலங்குடி மேலமாகாணத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ராஜா(25). இவர் இரவு மேலமாகாணத்தில் இருந்து டூவீலரில் கண்டரமாணிக்கம் வழியாக திருப்புத்தூர் வந்தார். அப்போது கண்டரமாணிக்கத்தை சேர்ந்த ராஜா முகமது(55)  திருப்புத்தூர் சென்று விட்டு டூவீலரில் வந்துள்ளார். கண்டரமாணிக்கம் அரசு மருத்துவமனை அருகில் இரண்டு டூவீலர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். தலையில் படுகாயமடைந்த ராஜா ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : boys ,
× RELATED யானைகவுனியில் உள்ள நகை பட்டறையில்...