×

ராமநாதபுரம் பஜார் பகுதியில் நோ பார்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள் நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம்

ராமநாதபுரம், மே 23:  ராமநாதபுரம் சாலைத்தெரு, பெரிய பஜார் பகுதியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ராமநாதபுரம் பஜார் ரோடு, சாலை தெரு, பெரிய கடை வீதி ரோட்டின் இருபுறங்களிலும் சாலையோர கடைகள் ஆக்கரமிப்புகளால், சாலையில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலான பகுதிகளை கண்டறிந்து நோபார்க்கிங் என போர்டு வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் அறிவிப்புகளை மதிக்காமல் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய போக்குவரத்து போலீசார் எதுக்கு பிரச்னை என கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கின்றனர்.

நோ பார்க்கிங் பகுதியில் கார்களை நிறுத்தி செல்வதால் டிராபிக் ஜாம் ஏற்பட்டு மக்கள் நடக்க முடியாத நிலையில் அவதிப்படுகிறனர். கிராமங்களிலிருந்து வரும் பெண்கள் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சாமான்களை வாங்கி தூக்கி செல்ல முடியாமல் திணறி நடந்து வரும் வழிகளில் வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இதனால் கஷ்டப்பட்டு தூக்கி வரும் பொருள்களை கீழே கொட்டி விடுகின்றனர். நடந்து செல்ல முடியாத அளவில் கஷ்டப்பட்டு வரும் மக்களை டிராபிக் போலீசார் வேடிக்கைதான் பார்க்கின்றனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதில்லை. ஒருவழி பாதை என்ற  நடவடிக்கையில் பேரிகார்டுகளை போட்டு இருக்கும் பாதையையும் அடைத்து விட்டனர். மாற்று வழி பாதையில்லாத நிலையில் ஒருவழி பாதையை முறைப்படுத்துவது சாத்தியமில்லை என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். டிராபிக் அதிகமான இடத்தில் நோ பார்க்கிங் என போர்டு வைத்தும் வாகனங்களை நிறுத்த அனுமதிப்பது ஏன் என கேள்வி கேட்கின்றனர்.

சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பணத்தை அட்வான்சாக கொடுத்து அதிக அளவில் முதலீடு செய்து கடை நடத்தி வரும் நிலையில், கடை வாசலில் ஆக்கிரமிப்பு கடைகளால் வாடிக்கையாளர்கள் வர முடியாமல் திரும்பி செல்கின்றனர். காலை முதல் மாலை வரை ரோட்டோர கடைகளில் நடக்கும் வியாபாரத்தை வேடிக்கை பார்த்து கொண்டே இருப்பதாகவும். ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் இடத்திற்கான மூதலீடு இல்லாமல் பெரிய அளவில் வருமானம் பார்தது வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஓழுங்குபடுத்த டிராபிக் போலீசார் நிற்கும் இடங்களிலேயே ஆக்கிரமிப்பு, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்துதல் போன்ற விதி மீறல்களை அனுமதித்துள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர். சில நாட்களில் ரம்ஜான் பண்டிகை வருவதால் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். நெரிசலான பகுதியில் வாகனங்களை நிறுத்துபவர்களை தடுத்து நிறுத்தி நடந்து செல்லும் மக்களை விபத்து ஏற்படாமல் வீட்டுச்செல்ல காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதசாரிகளின் எதிர்பார்பாக உள்ளது.

Tags : area ,Ramanathapuram Bazaar ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...