×

அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

பரமக்குடி வைகை ஆற்றில் தெளிச்சத்தநல்லூர் பகுதியில் வலது, இடது பாசன கால்வாய்கள் பிரிந்து செல்கிறது. வைகை ஆற்றின் இடது பகுதியில் பிரிந்து செல்லும் கால்வாய் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளுக்கு விவசாய பாசனத்திற்கு பிரிந்து செல்கிறது. வலதுபுற கால்வாய் பரமக்குடி ஒட்டியுள்ள உரப்புளி, காமன்கோட்டை, மஞ்சக்கொல்லை, கருந்தனேந்தல் உள்ளிட்ட பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாய பாசனத்திற்கு செல்கிறது.

வலது கால்வாயிலிருந்து கூத்தன்கால்வாய் பிரிக்கப்பட்டு வெங்காளூர், புதுக்குடி, ஊரக்குடி, தோளூர், பாம்பூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கடைமடை கால்வாயாக உள்ளது. இந்நிலையில் ஆண்டு தோறும் வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்கும் பொது சூடியூர் அணைக்கட்டில் மட்டும் பெயரளவில் கருவேல மரங்களை வெட்டி விட்டு மற்ற கால்வாய்கள் தூர்வாரப்படாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் பரமக்குடி பொன்னையாபுரம் வழியாக பாசன கால்வாய் சாக்கடை நிரம்பி  செல்லும் கால்வாய் தூர்வாரப்படாமல் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. பல ஆண்டுகளாக அப்படியே கிடக்கும் கால்வாயை தூர்வாரப்பட்டு மழை காலங்களில் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை