ராசிபுரத்தில் திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

ராசிபுரம், மே 23: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றவுள்ள, திமுக மற்றும் கூட்டணி கட்சி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், நேற்று ராசிபுரத்தில் நடந்தது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ மற்றும் கொமதேக வேட்பாளர் சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கொமதேக மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவராக பணியாற்ற உள்ள திமுக கூட்டணி கட்சியினர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் வாக்கு எண்ணும் பணியாற்ற உள்ள முகவர்கள் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,Agents Advisory Meeting ,Rasipuram ,
× RELATED ராசிபுரத்தில் திமுக சார்பில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்