×

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் சிஐடியூ கூட்டத்தில் முடிவு

பெரம்பலூர், மே 23: பெரம்பலூரில் நடந்த சிஐடியு மாவட்டக்குழு கூட்டத்தில் தூத் துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.பெரம்பலூர் துறைமங்கலத்தில் சிஐடியூ மாவட்டக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சிற்றம்பலம் தலைமை வகித்தார். சிபிஎம் வட்ட செயலாளர் ராஜாங்கம், மாவட்ட  செயலாளர் கருப்பையன், சிஐடியு மாவட்ட செயலாளர் அழகர்சாமி, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் அகஸ்டின், கருணாநிதி, மாவட்ட நிர்வாகி துரைசாமி உள்ளிட்ட  பலர்  கலந்து கொண்டனர்.

இந்த  கூட்டத்தில், தூத்துக்குடி வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் இறந்த அப்பாவிப் பொதுமக்களுக்கும், போராளிகளுக்கும் நினைவேந்தல் நடந்தது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்வரை போராடுவது என இந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. மேலும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார் கம்பெனி தொழிற்சாலையைத் தொடர்ந்து இயக்குவதற்கு தொழிற்துறையும், தமிழகஅரசும் நட வடிக்கை எடுக்க வலியறுத்தப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள சிஐடியூ மாநிலச் செயலாளர் முத்துக்குமாரை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்மீது உள்ள வழக்குகளை வாபஸ் பெறவும் ஏகமனதாக  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags : fight ,Sterlite ,
× RELATED லாரியில் வந்த தண்ணீர் பிடிக்க தனிமை முகாமில் குழாயடி சண்டை