×

திருச்செங்கோடு செங்குந்தர் கல்லூரியில் இளம் மாணவ விஞ்ஞானிகள் பயிலரங்கம்; 15 நாட்கள் நடந்தது

திருச்செங்கோடு, மே 23: கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் பண்பாட்டை மேம்படுத்தும் விதமாக, இளம் மாணவ விஞ்ஞானிகள் பயிலரங்கம், திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது.
தேசிய தொழில்நுட்ப அறிவியல் மாநில மன்றம் சார்பில் நடந்த இந்த பயிலரங்கு, 15 நாட்கள் நடந்தது. இதில் சேலம் மற்றும் நாமக்கல்  மாவட்டங்களை சேர்ந்த 80 மாணவர்கள் பங்கேற்றனர்.  அவர்கள் 25 அறிவியல் செயல் மாதிரிகளை உருவாக்கி இருந்தனர். பயிலரங்கு நிறைவு விழா கல்லூரியின் தலைவர்  தொழிலதிபர் ஜான்சன்ஸ் நடராஜன் தலைமையில் நடந்தது. முதல்வர் ரவிக்குமார் வரவேற்றார். கல்லூரி தாளாளர்  ராஜசேகரன் முன்னிலை வகித்தார். கல்லூரி டீன் பாலதண்டபாணி வாழ்த்திப்  பேசினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அதிகாரி ரமேஷ் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர்  வெங்கடாசலம் நன்றி கூறினார்.  

Tags : student scientists ,Sengundar College ,Tiruchengode ,
× RELATED ₹22.38 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்