சேலம் லீ பஜாரில் 70 டன் மஞ்சள் ₹50 லட்சத்திற்கு ஏலம்

சேலம், மே 23: சேலம் லீ பஜார் மஞ்சள் மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் 70 டன் மஞ்சள் ₹0 லட்சத்திற்கு ஏலம் போனது. தமிழகத்தில் ஈரோடுக்கு அடுத்தப்படியாக சேலம் லீ பஜாரில் பெரிய மஞ்சள் மஞ்சள் மண்டி உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் மஞ்சள் ஏலம் நடக்கும். இந்த ஏலத்திற்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இங்கு விற்பனைக்கு வரும் மஞ்சளை சேலம், கோவை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளை மஞ்சள் வியாபாரிகள் ஏலம் எடுக்க வருகின்றனர். நேற்று நடந்த ஏலத்திற்கு 70 டன் மஞ்சள் விற்பனைக்கு வந்தது. இந்த மஞ்சள் ₹50 லட்சத்திற்கு ஏலம் போனது. ஒரு குவிண்டால் ₹7200 முதல் ₹8500க்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டது.

Related Stories: