இருதரப்பு மோதல் அதிகாரிகள் சமரசம்

தொண்டி, மே 23: முள்ளிமுனை கடற்கரை கிராமத்தில் மீனவர்களிடம் தேர்தல் தகராறு, கோவில் உள்ளிட்ட பல முன்விரோதம் காரணமாக அடிக்கடி பிரச்னை நடைபெற்று வருகிறது. இதனால் கோவில் திருவிழா நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கிராமம் முற்றிலும் மீனவர்கள் வசிக்கும் பகுதியாகும். இங்கு கோவில் திருவிழா நடத்துவது, தேர்தல், கிராமத்தலைவர் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்கில் இரு தரப்பினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

இதன் உச்சகட்டமாக கடந்த வருடம் மீனவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து பதட்டம் அதிகரித்தது. இதனால் அடிக்கடி இங்கு பிரச்னை நடைபெற்று வந்தது. அதிகாரிகளும் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்படுவதால் இருதரப்பையும் சமாதானப்படுத்தும் விதமாக அதிகாரிகள் மீண்டும் சமாதான கூட்டம் நடத்த உள்ளனர். இதில் முள்ளிமுனை கிராம மக்கள் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : conflict authorities ,
× RELATED சிவகங்கையில் நாளை மின்தடை