திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

ஓசூர், மே 23:  கிருஷ்ணகிரி திமுக மேற்கு மாவட்ட அலுவலகத்தில், வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் முகவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ பேசுகையில், ‘திமுக முகவர்கள் அனைவரும் 6 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்தில் இருக்க வேண்டும். மொபைல் போன் கொண்டு செல்லக்கூடாது. பேனா மற்றும் பேப்பர் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை தவறாமல் எடுத்து செல்ல வேண்டும்,’ என்றார். கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சீனிவாசன், தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், பொதுகுழு உறுப்பினர் சின்னச்சாமி, ஓசூர் சட்டமன்ற வேட்பாளர் சத்யா, நகர துணை செயலாளர் நாகராஜ், பொருளாளர் சென்னீரப்பா மற்றும் ஒசூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

× RELATED பிரதமரிடம் திமுக மனு