கோடைவிடுமுறையையொட்டி மாயனூர் பூங்காவுக்கு சிறுவர்கள் வருகை அதிகரிப்பு

கரூர், மே 23: கோடை விடுமுறையையொட்டி மாயனூர் பூங்காவுக்கு சிறுவர்கள் வருகை அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை அருகே செல்லாண்டியம்மன்கோயில் கரையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்காவில் செடிகள், சிறுவர்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுஉபகரணங்கள், வண்ண மீன்கள்அருங்காட்சியகம், உடற்பயிற்சிக்கூடம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது கோடை விடுமுறை என்பதால் சிறுவர்களை அழைத்துவருகின்றனர். பெற்றோர்கள் சிறுவர்களுடன் வரும்எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.பூங்காவில் தேன் உற்பத்திக்காக தேனீபெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பூச்செடிகளும் விற்பனை செய்யப்படுகிறது. ஏராளமானோர் ஆர்வத்துடன் பூச்செடிகளை வாங்கிசெல்கின்றனர்.Tags : boys ,Meynoor park ,summer vacation ,
× RELATED தமிழகம் முழுவதும் மாநகராட்சி,...