×

அரூரில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

அரூர், மே 23:  அரூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அரூரில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், ரவுண்டானா பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர தலைவர் கணேசன், வட்டார தலைவர் சுபாஷ், காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மோகன், செல்வம், சுகுமாரன், வைரம், மார்க்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Rajiv Memorial Day ,
× RELATED அரூரில் சாலை ஓரங்களில் உள்ள காய்கறி...