பைக் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி: ஒருவர் படுகாயம்

மாமல்லபுரம், மே 23: கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பை சேர்ந்தவர் ஆதித்யாஜெகன் (48). அங்குள்ள தனியார் டிராக்டர் நிறுவனத்தில், விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.  நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆதித்யாஜெகன், இரவு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.இரவு 11 மணியளவில் மாமல்லபுரம் அருகே கடம்பாடி என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த பைக் மீது கார் மோதியது. இதில், பைக்கில் பயணம் செய்த புதுச்சேரி, திம்மையன் பேட்டையை சேர்ந்த ரஞ்சித்குமார் (22), அவரது நண்பர் பந்துரெட்டிபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார் (21), ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். விபத்தில் ஆதித்யாஜெகனும் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயமடைந்த ஆதித்யாஜெகனை சிகிச்சைக்காகவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : car crash ,
× RELATED பைக் விபத்தில் இருவர்பலி