சக்தி விநாயகர் கோயிலில் மழை வேண்டி யாகம்

செங்கல்பட்டு, மே.23: செங்கல்பட்டில், சக்தி விநாயகர் கோயிலில் வெப்பத்தை தணிக்க மழை வேண்டி நேற்று யாகம் நடத்தப்பட்டது.அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இதைதொடர்ந்து நாள் தோறும் கடும் வெயிலால் மக்கள் தவித்து வருகின்றனர். அதேவேளையில், கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்து போனதால், மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள் தண்ணீர் இல்லாமல் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.இதையொட்டி, கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் தவிக்கின்றனர்.
 இந்நிலையில், செங்கல்பட்டு  சப் கலெக்டர் அலுவலகம்  அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சக்தி விநாயகர் கோயில்  அமைந்துள்ளது. இங்கு மழை வேண்டி சிறப்பு யாகம் நேற்று நடந்தது. கோயில் நிர்வாக அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி,  இணை ஆணையர் தனபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கோயிலின் உள்பகுதியில்  அக்னியாகம், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகா தீபாராதனை நடத்தப்பட்டது.   இதில்  இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சண்முகம், இந்து முன்னணியை சேர்ந்த ராஜா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags : Shiva ,Shakti Vinayaka Temple ,
× RELATED உடைந்து நாசமான சோலார் மின் தகடு