×

ஆபாச பேச்சு: வாலிபர் கைது

சிதம்பரம், மே 23: சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்குராஜன் மற்றும் போலீசார் சிதம்பரம் கஞ்சித்தொட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் கேடு விளைவிக்கும் வகையில் சிதம்பரம் ஓமக்குளம் சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த ஜோசப் மகன் லெனின் (32) என்பவர் ஆபாசமாக பேசிக்கொண்டிருந்தார். அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சங்குராஜன் அங்கிருந்து செல்லுமாறு கூறியும் செல்லாததால் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என தெரியவந்தது.

Tags :
× RELATED ஆட்சியர் அலுவலகத்தில் ஜீப் கண்ணாடி உடைப்பு கடலூரில் பரபரப்பு