×

கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

திசையன்விளை, மே 22:  திசையன்விளை அருகே உள்ள இலக்கரிவிளையில் சுமார் 60 அடி ஆழமான தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் மயில் ஒன்று  தவறி விழுந்தது. இது குறித்து ஒன்றிய பாஜ கூட்டுறவு அணி தலைவர் சேர்மத்துரை திசையன்விளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் வீரர்கள் வானமாமலை, ராஜதுரை, பாலசுப்பிரமணியன் ஆகியோர் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி ஆண் மயிலை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.

Tags : well ,
× RELATED தஞ்சை அரசு மருத்துவமனை சிறப்பாக...