×

நாளை டாஸ்மாக் கடை விடுமுறை

திருப்பூர், மே 22:  வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு திருப்பூரில் நாளை (23ம் தேதி) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 திருப்பூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பழனிச்சாமி தெரிவித்தார்.
திருப்பூரில் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு

திருப்பூர், மே 22:  திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, கொலை, கொள்ளை, சூதாட்டம் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய போலீசார் சிலர் துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  திருப்பூர் பகுதியில் தொடர் கொள்ளை, வழிப்பறி, சேவல்கட்டு, சட்டவிரோத புகையிலை பொருட்கள் விற்பனை, ஒரு நம்பர் லாட்டரி, 24 மணி நேர மது விற்பனை உள்ளிட்ட பல வகையான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் ஆளுங்கட்சி பிரமுகர்கள் சட்டவிரோதமாக நடத்தும் சூதாட்ட விடுதிகள் திருப்பூரில் உள்ள தொழிலார்களின் வாழ்வில் ஒரு பகுதியை சூதாடிவிடுகிறது. மேலும், மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது. அதில் பகுதிகடைகளில் மட்டுமே பார் வசதி உள்ளது. பார்களிலும், பாருக்கு அருகில் உள்ள பகுதிகளிலும் 24 மணி நேரமும் மது விற்பனை ஜோராக நடக்கிறது. இவைகள் அந்தந்த பகுதி போலீசாரின் ஆசியுடன் நடப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மற்றும் பணபலம் கொண்டவர்களாக உள்ளனர். இதனால் சில போலீசார் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூரில் இருக்கும் போலீஸ் நிலையங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக புகார் அளிக்க பொதுமக்கள் சென்றால் புகாரை பெறாமல் ‘அப்படியா பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொள்கிறார்களாம்.

இது குறித்து சுட்டிக்காட்டினால், ஒருசில நேரங்களில் பெயரளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. குற்ற சம்பவங்களில் புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் தூங்கி வழிகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திருப்பூர் பகுதிகளில் அதிகப்படியான குற்றச்செயல்கள் அரங்கேறி வருகிறது. திருப்பூர் மாநகரப்பகுதிக்குள் பாண்டியன் நகர், போயம்பாளையம், பூலுவபட்டி, பழைய பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் கஞ்சா விற்பனை, மது விற்பனை நடக்கிறது.

குறிப்பாக திருமுருகன் பூண்டி போலீஸ் நிலைய எல்லைக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை போலீசார் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வந்த இடத்தில் கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம், சூதாட்ட விடுதிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இவைகளால் பல குடும்பங்கள் சீரழிவை நோக்கி பயணிக்கிறது. இவைகளை போலீசார் கட்டுபடுத்துவதாக தெரியவில்லை. இது குறித்து பொதுமக்கள் மாவட்ட கலெக்டர், போலீசாரிடம் மனு அளித்தும் பயனில்லை. இனிமேலாவது போலீசார் கண்விழித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : shop holidays ,
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா