ராஜிவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

ஊட்டி, மே 22: ராஜிவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு நேற்று ஊட்டியில் காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம் சென்றர். முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட தினத்தை அரசு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக அனுசரித்து வருகிறது. அன்றயை தினத்தில், கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழியும் மேற்க்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஊட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்பட்டது. முன்னதாக ஏடிசி., பகுதியில் மாவட்ட தலைவர் மற்றும் எம்எல்ஏ., கணேஷ் தலைமையில் அமைதி ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது.

இதில், நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சுப்ரமணியம், நகர தலைவர் கெம்பையா, ஊட்டி ரவிக்குமார், வட்டார தலைவர்கள் சுரேஷ், குந்தா நேரு, கோத்தகிரி மணி, பிசிசி., உறுப்பினர் ராஜூ உட்பட பலர் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து, கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மஞ்சூர்: மஞ்சூரில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது. குந்தா வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மஞ்சூரில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு குந்தா வட்டார காங்கிரஸ் தலைவர் நேரு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வாசுதேவன், முன்னாள் வட்டார தலைவர் கோபாலன், பேரூராட்சி கமிட்டி தலைவர் ராஜ்குமார், பீமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ராஜீவ்காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னாள் துணை தலைவர் நாகராஜ் தலைமையில் கட்சியினர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் நிர்வாகிகள் வெங்கிட்டுசாமி, போஜன், பெள்ளி முத்தன், ராஜூபெட்டன், ராஜன், சிவக்குமார், காந்தி, குமார், சத்யசீலன், ராமச்சந்திரன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பிக்கட்டி, கிண்ணக்கொரை, பெங்கால்மட்டம் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Tags : Rajiv Gandhi Memorial Day ,
× RELATED ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் அமைதி ஊர்வலம்