×

கூடைப்பந்து போட்டி ேகரளா, அரியானா அணிகள் சாம்பியன்

கோவை, மே 22: கோவையில் நடந்த தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் கேரளா அணியும், ஆண்கள் பிரிவில் அரியானா அணியும் சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 16 வயதிற்குட்பட்டோருக்கான 36வது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி கோவையில் கடந்த 14ம் தேதி துவங்கியது.

லீக் ஆட்டங்கள் முடிவு பெற்ற நிலையில், நேற்று இறுதி போட்டி நடந்தது. இதில், பெண்கள் பிரிவில் தமிழகம்-கேரளா அணிகள் மோதியது. இதில், கேரளா அணி 80 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. ஆண்கள் இறுதி போட்டியில் அரியானா- கேரளா அணிகள் மோதியது. இதில், அரியானா 81 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் கோவிந்தராஜ், பொதுச்செயலாளர் சந்தர்முகி சர்மா, சிஆர்ஐ பம்ப்ஸ் நிறுவன இணை இயக்குனர் செல்வராஜ், பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ருத்ரமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர்.
இதில், முதலிடம் பிடித்த அரியானா அணிக்கு ரூ.1.5 லட்சம் மற்றும் கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. 2ம் இடம் பிடித்த கேரளா அணிக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. 3ம் இடம் பிடித்த ராஜஸ்தான் அணிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற கேரள அணிக்கு ரூ.1.5 லட்சமும், 2ம் இடம் பிடித்த தமிழக அணிக்கு ரூ.1 லட்சமும், 3ம் இடம் பிடித்த ராஜஸ்தான் அணிக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது. சிறந்த வீரராக அரியானா அணியின் சகில், கேரளா அணி வீராங்கனை மேரி ஜக்காரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழக அணி சத்யாவிற்கு பிராமிசிங் பிளேயர் விருது வழங்கப்பட்டது.

Tags : Basketball match ,champions champion ,Haryana ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...