×

கோவையில் ராஜீவ் 28வது நினைவுதின அமைதி ஊர்வலம்

கோவை, மே 22: கோவை  மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் 28வது நினைவுதினத்தையொட்டி, அமைதி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. கோவை  ரயில் நிலையம் எதிரே கீதா ஹால் ரோட்டில் உள்ள அதன் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், செஞ்சிலுவை சங்க அலுவலத்தை நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் கணபதி சிவக்குமார் தலைமை தாங்கினார்.

இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும், மேலிட பார்வையாளருமான டி.செல்வம் தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மவுன ஊர்வலத்தில், அகில இந்திய காங்கிரஸ் கவுன்சில் உறுப்பினர் சரவணகுமார், நிர்வாகிகள் மகேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, பச்சமுத்து, குருசாமி, குணசேகரன், துரை, வக்கீல் கருப்புசாமி, கோவை போஸ், இராம.நாகராஜ், பாஸ்கர், காந்தகுமார், வசந்த், சிவக்குமார், தமிழ்செல்வன், பட்டம்மாள், திலகவதி, கேபிள் வினோத்,  துளசிராஜ், காமராஜ்துல்லா உள்பட பலர் பங்கேற்றனர்.  

இதேபோல், கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் 28வது நினைவு தினத்தையொட்டி, அமைதி ஊர்வலம் ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானம் முதல் காந்திபார்க் வரை நடந்தது. மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமை தாங்கினார். இதையொட்டி, மேலிட பொறுப்பாளர்  ஆர்.எம்.பழனிசாமி தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.  

ராஜீவ் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஊர்வலத்தில், முன்னாள்  மாவட்ட தலைவர் சின்னையன்,  ஐஎன்டியுசி மாநில பொதுச்செயலாளர் கோவை செல்வன், எச்.எம்.எஸ் கோவை மாவட்ட  தலைவர் ராஜாமணி, கே.பி.எஸ்.மணி, கே,பி.செல்வராஜ் கணேசமூர்த்தி,  நவீன்குமார், விஜயகுமார், சின்னராஜ், ரங்கராஜ், திருமூர்த்தி, காயத்ரி,  ராஜேந்திரன், லாலிரோடு செல்வம், கோவை அனீபா, ஆகாஷ், சுடர்விழி,  வெள்ளிங்கிரி, நடராஜ், சக்திசதீஷ், சிவாஜிகந்தசாமி,  பேரூர் மயில், வரதராஜ், அசோக், அயூப்கான், சகாயராஜ், கணேசன், பார்த்திபன், ரங்கசாமி, பாலு, ராஜேந்திரன் மணி உள்பட பலர்  கலந்துகொண்டனர்.

கோவை ராமநாதபுரம் சர்க்கிள் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் 28வது நினைவுதினம்  புலியகுளம் பெரியார் நகரில் நேற்று நடந்தது. ஐஎன்டியுசி மாநில  பொதுச்செயலாளர் கோவை செல்வன், தலைமை தாங்கி, ராஜீவ் உருவ படத்துக்கு  மலரஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில், ஷோபனா செல்வன், சர்க்கிள் தலைவர்  கணேசன், வார்டு தலைவர்கள் பார்த்தீபன், சகாயராஜ், காந்தன், நமச்சிவாயம்,  சரவணசாமி, ஜெயகிருஷ்ணன் மற்றும் சந்தீப் சங்கர், காட்டூர் சோமு, பாரதி,  பாப்பாத்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Rajiv ,28th Anniversary Peace Procession ,Coimbatore ,
× RELATED மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக...