ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

ஓமலூர், மே 22: ஓமலூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற அமைதி ஊர்வலத்திற்கு, சேலம் மேற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ கோபிநாத் கலந்துகொண்டு மவுன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ராஜீவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அனைவரும் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துகொன்டனர். நிகழ்ச்சியில் வட்டார தலைவர் சக்திவேல், நகர தலைவர் மாரியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், இளைஞர் காங்கிரஸ் கணேசன், மணி, ஜெயரத்தினம், இளங்கோ, முருகசாமி, அறிவழகன், மேட்டூர் வெங்கடேஸ்வரன், எடப்பாடி நாகராஜி, அசோக், மேச்சேரி செந்தில், காடையாம்பட்டி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆத்தூர்: ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சாரதா ரவுண்டனா பகுதியில் அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அர்த்தனாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் உடையார்பாளையம் காந்தி சிலை முன்பிருந்து, அமைதி ஊர்வலம் நடந்தது. மாவட்ட பொருளாளர் ஓசுமணி, நகர தலைவர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Rajiv Gandhi Memorial Day ,
× RELATED ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் அமைதி ஊர்வலம்